இலண்டனிலிருந்து சிங்கப்பூர் பயணித்த விமானத்தில் ஒருவர் பலி! 30 பேர் காயம்!!


இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்திலிருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன் வானூர்தி வானில் சடுதியாககீழே இறங்கியதால் பயணி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 30க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

சிங்கப்பூர் செல்லும் போயிங் 777-300ER வானூர்தி பாங்காக்கிற்குத் திருப்பிவிடப்பட்டு உள்ளூர் நேரப்படி 15:45 மணிக்கு தரையிறங்கியது.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக ஓடுபாதையில் இருந்து மாற்றுவதற்காக பாங்காக்கின் சமிதிவேஜ் ஸ்ரீநகரின் மருத்துவமனையிலிருந்து உள்ளூர் அவசரகால குழுவினர் வானூர்தி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SQ 321 வானூர்தி மொத்தம் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களை ஏற்றிச் சென்றதாக வானூர்தி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இறந்தவரின் குடும்பத்தினருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்க தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், கூடுதல் உதவி தேவைப்படுவதற்கு ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புவதாகவும் வானூர்தி நிறுவனம் மேலும் கூறியது.

தாய்லாந்து அதிகாரிகள் ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகால குழுக்களை சுவர்ணபூமி வானூர்தி நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட், பயணிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசாங்கம் உதவி செய்யும் என்று கூறினார்.

No comments