காஸாவில் மட்டுமா கொலைகள்?
இறுதிப் போரின் போது இலங்கை அரசாங்கத்தின் இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவினர்களுக்கு உள்ளகப் பொறிமுறையின் ஊடாக நீதி வழங்கப்படும் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய தாக்குதலால் அநாததையாகியுள்ள பலஸ்தீன காஸா பகுதியில் உள்ள குழந்தைகளின் நலனுக்காகப் பொதுமக்களின் பணத்தை சேகரிக்கும் ஜனாதிபதி, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை புறக்கணிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கு அல்ல குற்றங்களை புரிந்த அரச படைகளை பாதுகாக்கும் உள்ளகப் பொறிமுறையை அரசாங்கம் முன்வைத்து வருகின்றது.
இதனிடையே பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்காக நீதி கோரி வன்னியில் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2657 நாட்கள் கடந்துள்ளது.
யுத்தம் முடிவடைந்த போது எமது நாட்டின் பிள்ளைகள் ஒப்படைக்கப்பட்டனர். அதேபோல, போரில் எத்தனை தமிழ் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்?
நாட்டில் அவர்கள் நடத்திய போரில் பாதிக்கப்பட்டவர்களை அவரது கண்கள் காணவில்லை. காசாவில் போரினால் உயிரிழந்த குழந்தைகளுக்காக இந்நாட்டின் ஜனாதிபதி சிறுவர் நிதியத்தை நிறுவுகிறார் என்றால் அதில் அரசியல் நிகழ்ச்சி நிரல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட காசா சிறுவர் நிதியத்திற்கு இலங்கை நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் 127 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment