அனைவரும் அடிவருடிகள்:கஜேந்திரன்!



தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்காக ஒரு தளத்தை போட்டுக்கொண்டிருந்த ரணிலின் உண்மை முகத்தை மறைப்பதற்காக தேச விரோதிகளான எம்.ஏ சுமந்திரனும் மற்றும் சி.வி விக்னேஸ்வரனும் பொய் பிரச்சாரத்தை செய்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.

குறிப்பாக இந்தியாவினதும் ரணில் விக்ரமசிங்கவினதும் அடிவருடியே சி.வி.விக்னேஸ்வரன் எனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் விமர்சனம் வெளியிட்டுள்ளர்.

கடந்த காலத்தில் ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவர் முன்வந்து மோடிக்கு கையொப்பமிட்டு சி.வி.விக்கினேஸ்வரன் அனுப்பினார். 2016 ஆம் ஆண்டு ரணில் மைத்திரி கூட்டமைப்பு தயாரித்த ஒற்றையாட்சி வரைபினையும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.


இவ்வாறாக விக்னேஸ்வரனுக்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் எந்தவித இடைவெளியும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. இந்தியாவின் முகவராக இருக்கக்கூடிய ரணில் விக்ரமசிங்கவை பலப்படுத்துகின்ற செயற்பாட்டிலேயே விக்னேஸ்வரன் தொடர்ந்து செயற்படுகின்றார் எனவும் தெரிவித்தார்.

“ஜனாதிபதி தேர்தலில் விரக்தியடைந்துள்ள தமிழ் மக்களை வாக்கு சாவடிக்கு இழுத்து செல்லவே பொது வேட்பாளர் நாடகம் நிகழ்த்தபடுகிறது. 

இந்தியா காலால் இடுகின்ற கட்டளையை தலையால் நிறைவேற்றுகின்றவர் தான் விக்னேஸ்வரன். ஆகவே இந்தியாவை பிடி கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர் பொதுவேட்பாளர் விடயத்தில் இந்தியா இல்லை என கூறினாலும் ரணில் விக்ரமசிங்கவை வெல்ல வைக்க வேண்டுமானால் தமிழ் மக்கள் வாக்கு சாவடிகளுக்கு செல்ல வேண்டும் தமிழ் மக்களுக்கு அந்த மனநிலை இல்லை.

ஆகவே வாக்கு சாவடிகளுக்கு சென்று மக்கள் வாக்களிக்கும் மனநிலையை உருவாக்கவே இந்த பொதுவேட்பாளர் நாடகம் அரங்கேறியுள்ளதாகவும் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments