எவரிலும் நம்பிக்கையில்லை:குடும்பங்கள்



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை.

அவர்கள் மூவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தொடர்பில் எதையும் செய்ய மாட்டார்கள் அத்தோடு யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்காத சிங்கள அரசு எங்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை. எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் எமக்கு சர்வதேச விசாரணை ஒன்றே தேவையென மீண்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் வலியுறுத்தியுள்ளன.

யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தராத சிங்கள அரசு தமிழர்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இன்று (30) வியாழக்கிழமை காலை; மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றிருந்தது.

“காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை தேடி நாங்கள் 15 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் ஆனால் அரசாங்கம் இதுவரை எமக்கு உரிய தீர்வை வழங்கவில்லையெனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன..


No comments