பொதுவேட்பாளரும் அமெரிக்க தூதரும்!
ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளர் விடயம் பரபரப்பாகியுள்ள நிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (15) விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளார்.
வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கான வழிகளை ஆராய்வதற்காக சிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளூர் அரச அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் கியோரின் பலதரப்பட்ட கண்ணோட்டங்களைக் கேட்பதற்காக இந்த வாரம் நான் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளதாகவும் ஜீலி சங் தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் விவசாய மாணவர்களுடன் மறுசுழற்சி மற்றும் பாதுகாப்பு மற்றும் மரங்களை நடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது.
அதன்போது, அமெரிக்க தூதர் ஜீலி சங் பங்கேற்றிருந்தார்.
ஜனாதிபதி தேர்தல் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் மக்களிடையே எதிர்பார்ப்புக்கள் உச்சமடைந்துள்ள நிலையில் அமெரிக்க தூதரின் பயணம் கவனத்தை ஈர்த்துள்ளது.
Post a Comment