சுமந்திரனின் பரீட்சார்த்தம் :ஜீன் 9?
பொதுவேட்பாளர் நியமிப்பதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயும் விசேட கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது சம்பந்தமாக முனைப்பாக செயற்பட்டு கொண்டிருக்கிற சிவில் சமூகத்தினர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் பொதுவெளியிலே பகிரங்கமாக ஆரோக்கியமான முறையிலே கருத்து பரிமாற்றம் செய்வது நல்லது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.
எதிர்வருகிற ஜூன் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் பாரியளவிலான கூட்டமொன்று இரு தரப்பு நியாயங்களையும் ஆரோக்கியமான முறையிலே கருத்துக்களை பரிமாறுகிற வகையில் ஏற்பாடாகியுள்ளது.
இரு தரப்பில் இருந்தும் கருத்துக்களை முன்வைக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அப்படியான உரையாடல் நடைபெறுவது நல்லது. ஏனென்றால் பொது மக்களுக்கும் இதனுடைய சாதக பாதகங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். மக்களுடைய மனதிலே எப்படியான சிந்தனைகள் இருக்கிறதென்பதையும் நாங்களும் ஓர் அளவுகோளிட்டு அறியக் கூடியதாக இருக்கும்.
எடுக்கப்படும் தீர்மானங்கள் மக்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதிலே மக்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment