முதலில் சர்வசன வாக்கெடுப்பாம்?
ஜனாதிபதி தேர்தலா நாடாளுமன்ற தேர்தலாவென்ற பரபரப்பின் மத்தியில் இரு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்பார்த்தபடி ஜனாதிபதித் தேர்தலையோ, நாடாளுமன்றத் தேர்தலையோ நடத்தாது ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களுடனான ஒப்பந்தம் காரணமாக அது அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அது இன்றியமையாத விடயம் எனவும், அதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது மிகவும் ஜனநாயகமானது எனவும் கூறப்படுகின்றது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் அதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 17 மற்றும் ஒக்டோபர் 18 க்கு இடையில் நடைபெறும், அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெறும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.
எனினும் தேர்தல்களை ஒத்தி வைப்பது தொடர்பிலான மக்களது மனநிலையினை அறியவே தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுவருவதாக கூறப்படுகின்றது.
Post a Comment