சவேந்திரசில்வாவிற்கு புனர்வாழ்வு!



போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராணுவ தளபதிகளை தொடர்ந்தும் சேவையிலீடுபடுத்த ரணில் விக்கிரமசிங்க அரசு முனைப்பு காண்பித்தே வருகின்றது.

இந்நிலையில் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அரசாங்கம் மீண்டும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக என தெரிவித்து மீண்டும் சேவையில் இணைக்க அழைப்பு விடுத்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(20) இடம்பெற்ற டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பான மீளாய்வு கூட்டத்திற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே இலங்கை இராணுவத்தினில் இருந்து சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்காக பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு மாத கால பொது மன்னிப்பு காலம் நேற்றுடன் (20) முடிவடைந்த நிலையில் 15,667 இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  ஆண்டின் டிசம்பர் 31,ம் திகதி மற்;றும் அதற்கு முன் விடுமுறை இல்லாமல் பணிக்கு சமூகமளிக்காத இராணுவத்தினருக்கே பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காமல் தற்போது வெளிநாட்டில் இருக்கும் 373 இராணுவத்தினரை சட்டரீதியாக இராணுவ சேவையில் இருந்து விலகுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

எனினும் இராணுவத்திலிருந்து தப்பியோடி குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் பற்றி தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை.


No comments