ரணில் கதிரையை கைவிடார்!ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து போட்டியிட பொருத்தமான தமிழ்கட்சிகளுடன் ரணில் விக்கிரமசிங்கவின் பிரதிநிதிகள் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே தானும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அடுத்த மாதம் அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பலரால் ஒரு கதை பரப்பப்படுகிறது.

எவ்வாறாயினும், விக்கிரமசிங்க, அத்தகைய விடயத்தை முன்வைக்கும் அனைவருக்கும் ஒரு அடியை வழங்குவார், ஏனெனில் அவர் மற்றொரு பதவிக்காலத்தை கோருவார். அடுத்த மாதம் அவர் தனது வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்” என அவரது அமைச்சரவையினை சேர்ந்த நாணயக்கார அறிவித்துள்ளார்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க தனியொரு கட்சியில் போட்டியிட மாட்டார் என்றும், ஜனாதிபதி தேர்தலில் பல சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த மற்றொரு தொகுதியினர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டனர். 

சரியான நேரத்தில் சேரக் காத்திருக்கும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ இணைவார்கள். 

அதேபோன்று பலர் ஜக்கிய மக்கள் சக்தி தலைவரிடம் சில கோரிக்கைளை முன்வைத்துள்ளனர்.அவை நிறைவேற்றப்படாவிட்டால் அவர்கள் சஜித் பிறேமதாசாவை கைவிட்டு எங்களுடன் இணைவார்கள்” என்றும் நாணயக்கார அறிவித்துள்ளார்.


No comments