இலங்கை நாடாளுமன்றம் முன்னதாக கலைக்கப்படுமா??
எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் திடீரென இலங்கை நாடாளுமன்றம் அழைக்கப்படும் எனவும், மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு சுமார் மூன்று மாதங்கள் காணப்படும் நிலையில் ஜனாதிபதித் தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிலையில் இவ்வாறான கருத்துக்கள் எழுகின்றன.
முன்னதாக உள்ளூராட்சித் தேர்தல் திகதியையும் மூன்று மாதங்களுக்கு முன்னரே தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.ஆனால் தற்போது வரை தேர்தல் இடம்பெறவில்லை. அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலும் இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதியை தேர்வு செய்யும் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment