முள்ளிவாய்க்கால் வருவாரா ஆக்னெஸ்?இம்முறை இன அழிப்பினை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னெஸ் காலமார்ட் பங்கெடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தனது பதவிக்காலத்தில் முதல் முறையாக சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் எசெயலாளர் ஆக்னெஸ் காலமார்ட்இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி தெற்காசிய பிராந்தியத்திற்கு விஜயம் செய்யும் அவர் இலங்கைக்கும் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூர்ந்து எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நிகழ்வில் அவர் கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே  வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத காவல்துறையினரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்  கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கை அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 15 ஆண்டுகள் கடந்துள்ளன. ஆனால் இன்றுவரை படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கருணா, பிள்ளையான், ஈ.பி.டி.பி. யினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களை தேடி அவர்களின் உறவுகள் இன்றும் அலைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

 

No comments