06 மாதங்களுக்கு மேலாக தொடரும் யுக்திய - ஒரு லட்சத்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது


பொலிஸாரால் கடந்த 06 மாத கால பகுதிக்கு மேலாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள யுக்திய நடவடிக்கையின் ஆரம்பம் முதல் இதுவரை 1 இலட்சத்து 11ஆயிரத்து 074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4ஆயிரத்து 472 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர்  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளில் 41 கிலோ ஹெரோயின், 43 கிலோ ஐஸ் போதைப்பொருள், 03 லட்சம் போதை மாத்திரைகள்  மற்றும் 1,500 மில்லியன் ரூபா சட்டவிரோத சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments