வவுனியாவில் விபத்து: வாகனத்தின் ஓட்டுநர் படுகாயம்
வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் இன்று சனிக்கிழமை (06) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அநுராதபுரத்திலிருத்து யாழ்ப்பாணம் நோக்கிச்சென்றுகொண்டிருந்த தொடருந்து ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடவையினை கடக்கமுற்பட்ட கெப் ரக வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் கெப் ரக வாகனம் கடுமையான சேதமடைந்ததுடன், அதன் ஓட்டுநர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் தொடருந்தின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து பயணிகள் இறக்கப்பட்டு மற்றொரு புகையிரதத்தில் ஏற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதேவேளை, குறித்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் சிலவருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் நான்குபேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment