இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டிக்காத நாடுகள் ஈரானின் தாக்குலைக் கண்டிக்கின்றன!!


இஸ்ரேல் மீது நேரடி ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் கொண்டு சரமாரியாக பல முனைகளிலிருந்து தாக்குதலை நடத்தியது.

அமேரிக்கா, இங்கிலாந்து, யேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜென்டினா, நெதர்லாந்து, டென்மார்க், மெக்சிகோ மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன.  

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஏழு உயர்மட்ட அதிகாரிகள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி என்று ஈரான் கூறியது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை.

இஸ்ரேலின் இத்தாக்குதலை தற்போது கண்டனம் தெரிவிக்கும் எவரும் கண்டிக்கவில்லை. ஆனால் ஈரான் நடத்திய தாக்குதலை இவர்கள் கண்டித்தனர். 

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் 51 சரத்தைப் பயன்படுத்தி ஈரான் தற்காப்பு நடவடிக்கைகாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியது.

இஸ்ரேல் இனித் தாக்குதல் நடத்தினால் இதைவிட பலமடங்கு தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் ஈரானுக்கு செல்லும் கப்பல்கள் இவரும் காலங்களில் தாக்கப்படும் என ஈரான் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுக்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், போர்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மத்திய கிழக்கில் பல முனைகளில் பெரிய இராணுவ மோதல்களுக்கு வழிவகுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்க அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்தப் பிராந்தியமோ அல்லது உலகமோ இன்னொரு போரைத் தாங்க முடியாது என்பதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன் என்றார்.

No comments