வாக்குகளிற்கு பேரம் பேசலாம்!



ஜனாதிபதி  தேர்தலில் பாெது வேட்பாளர் தேவையற்றது, மூன்று பிரதான வேட்பாளர்களுக்கும் தமிழர் வாக்கு தேவையாகவுள்ளது அதனை சாதகமாக பயன்படுத்தவேண்டும் என ஈழவர் ஐனநாயக முன்னனி (ஈரோஸ்) கட்சியின் தலைவர் துஸ்யந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலை பாெறுத்தவரை இந்த நாட்டிலே சிங்கள கட்சியை பிரதிநிதிப்படுத்தும் ஒருவரே ஜனாதிபதியாக கூடிய வாய்ப்பே இந்த நாட்டிலே இருக்கின்றது.

அதன் அடிப்படையிலே தமிழர் தரப்பாக ஒன்றிணைந்து எங்களது கொள்கைகளை முன் வைப்பதுடன், அதனை செய்யக்கூடிய தலைவருடன் எங்களது பிரச்சினைகளை தெளிவுபடுத்தி போகும் போது அது சாதகமானதாக இருக்கும்.ஒரு பொது வேட்பாளராக தமிழரை நிறுத்துவார்களேயானால் அது மிகக் குறைந்த சந்தர்ப்பமாகவே இருக்கும். மேலும் இது எதிர்காலத்தில் பெரும்பான்மையினருக்கு சாதகமானதாகவே அமையும் என்பது எனது கருத்து.

கடந்த தேர்தலின் போது கோட்டபாய ராஜபக்ச வென்று இருந்தார்.அவருக்கு தமிழர் தரப்பில் பெருமளவான ஆதரவு கிடைக்கவில்லை. அத்தோடு எங்களையும் அவர் புறக்கணித்திருந்தார். எங்களைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார ஆகிய மூவருக்கும் தமிழரது வாக்குகள் மிக முக்கியமாக உள்ளது.

எனவே அதை யோசித்து செயல்படுவது சிறப்பானதாக இருப்பதனால் நாங்கள் இது தொடர்பான எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை” எனத் தெரிவித்தார். 


No comments