இஸ்ரேல் மீது சமநேரத்தில் பல முனைகளிலிருந்து ஈரான் தாக்குதல்


இஸ்ரேல் மீது ஈரான் 400க்கும் மேற்பட்ட ட்ரோன், ஏவுகணைகள் மற்றும் பலிஸ்டிக் ஏவுகணைக்களைக் கொண்டு சரமாரியான தாக்குதலைத்

தொடுத்தது. சுமார் 2 மணி நேரம் தாக்குதலைத் இடைவிடாது பல முனைகளிலிருந்து நடத்தியது.

185 தற்கொலை ட்ரோன்கள் (suicide drones), 36 குரூஸ் ஏவுகணைகள் (Cruise missile), 110 சுபேஸ் ரூ சுபேஸ் ஏவுகணைகளைப் (Surface-to-surface missile), பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்பட்டதா ஈரான் ஈரான் அறிவித்தது.

அத்துடன் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் சுப்பசொனிக் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல்கள் நடத்தப்பட்ட மற்றொரு தகவல்கள் தெரவிக்கின்றன.

இதேநேரம் ஈரான், ஈராக், சிரியா, லெபனான் மற்றும் யேமன் நாடுகளிலிருந்து பல முனைகளிலிருந்து ஈரானிய புரட்சிக் காவல் படையினர், ஹில்புல்லா அமைப்பினர், ஈராக் ரெசிடன்ஸ் என பல தரப்பினரும் சமநேரத்தில் தாக்குதலை நடத்தினர். 300க்கு மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இஸ்ரேலின் ராமட் டேவிட் விமான தளம் மீது சுப்பர்சொனிக் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் விமான தளம் கடும் சேதங்களுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலில் ஏற்பட்ட தேசவிபரங்களை இஸ்ரேல் இதுவரை அறிவிக்கவில்லை. 

தாக்குதலையடுத்து இஸ்ரேல் மக்கள் அங்கும் இங்குமாக அலறியபடி பதற்றமான ஓடினார்கள். அவசரகால சமிக்ஞை ஒலிகள் எழுப்பப்பட்டன.

ஈரான், ஈராக், லெபனான், ஏமன் போன்ற நாடுகளில் மக்கள் வீதிகளில் இறங்கி கொடிகளை அசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஈரானின் வான்வழித்த தாக்குதல்களை அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் வானில் முடிந்தளது இடைமறித்து அழித்தாக அறிவித்தன.

இஸ்ரேலும் கணிசமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வழிமறித்து சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது.

இதேநேரம் ஜோர்டானும் ஈரானின் தாக்குதல்களை இடைமறித்ததாக அறிவித்தது. ஜோர்டான் தனது ஆதரவை இஸ்ரேலுக்கு வழங்குவதாக அறிவித்தது. 

தற்போது இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் முடிவடைந்துவிட்டதாக ஈரான் அறிவித்தது. மேலும் இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தினால் இதை விட பலமடங்கு தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

No comments