பறவைகள் விலங்குகளின் தாகத்தைத் தீர்க்கும் இளைஞர்கள்

பறவைகள், விலங்குகளின் தாகத்தை போக்கும் வகையில் இளைஞர்கள் சிலர் எடுத்த நடவடிக்கை தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் தற்போது வெப்பமான காலநிலை நிலவுவதால் மனிதர்கள் மாத்திரமன்றி மிருகங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

இந்நிலையில், வெப்பகாலத்தில் விலங்குகளின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு வவுனியா-மன்னார் வீதியின் சில பகுதிகளில் மண் சட்டி மற்றும் சிரட்டைகளைப் பயன்படுத்தி இளைஞர்களினால் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான தண்ணீர் தொட்டிகளை அமைத்து வெப்ப காலத்தில் பறவைகள், விலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் உன்னத கடமையில் குறித்த இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த இளைஞர்களின் இந்த செயலுக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

No comments