ஜூலியன் அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு ஆஸ்திரேலிய கோரிக்கையை பரிசீலீப்பதாக பிடன் அறிவிப்பு


விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான வழக்கை கைவிட வேண்டும் என்ற ஆஸ்திரேலியாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அசாஞ்சே தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆதரவுடன் அந்நாட்டு நாடாளுமன்றம் சமீபத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

இராணுவ இரகசியங்களை விக்கி லீக்ஸ் கேபிளில் கசிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 52 வயதான அவரை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த அமெரிக்கா விரும்புகிறது.

அசாஞ்சே குற்றச்சாட்டுகளை மறுத்தார், கசிவுகள் பத்திரிகையின் செயல் என்று கூறினார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் கோரிக்கை குறித்து ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டது, நாங்கள் அதை பரிசீலித்து வருகிறோம் என்று கூறினார்.

அவர் மரண தண்டனையை எதிர்கொள்ள மாட்டார் என்று அமெரிக்கா உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் கூறியதை அடுத்து, நாடு கடத்துவது மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது.

மே மாத இறுதியில் அமெரிக்க அதிகாரிகளின் பதில்களை உயர் நீதிமன்றம் மதிப்பீடு செய்ய உள்ளது.

No comments