ஆங்கிலக் காய்வாயை கடக்க முயன்றபோது ஐவர் உயிரிழப்பு


இன்று செவ்யாக்கிழமை காலை ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோது குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ருவாண்டாவிற்கு சிறிய படகுகளில் வருபவர்களை அனுப்பும் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் மசோதாவிற்கு இங்கிலாந்து சட்டமியற்றுபவர்கள் ஒப்புதல் அளித்த சில மணிநேரங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

வடக்கு பிரெஞ்சு கடற்கரையில் உள்ள Wimereux கடற்கரையில், Calais க்கு தெற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவர்களில் ஒருவர் குழந்தை என கூறப்படுகிறது.

சுமார் 100 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டு பிரெஞ்சு கடற்படைக் கப்பலில் தங்க வைக்கப்பட்டனர். 

தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிராந்திய செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

7 பேர் மீட்கப்பட்டதாகவும், ஆனால் 50க்கும் மேற்பட்டோர் படகில் தங்கி தங்கள் பயணத்தைத் தொடர முடிவு செய்ததாகவும் பிரான்ஸ் அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது. 

No comments