சுவிசில் உலங்குவானூர்தி விபத்து: ஐரிஸ் குடிமகன் உட்பட மூவர் பலி!!


சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மூவரில் ஐரிஷ் நபரும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிட் காம்பின் மலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை விபத்தின் பின்னர் மேலும் இரண்டு பேர் சிகிச்சைக்காக விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர். மற்றொருவர் பின்னர் மீட்கப்பட்டார்.

உலங்குவானூர்தி உள்ளூர் நேரப்படி சுமார் 09:25 மணிக்கு சறுக்கு வீரர்களுக்கான தரையிறக்கும் இடத்திற்கு வழிகாட்டி மற்றும் பார்வையாளர்களை அழைத்துச் சென்றது.

உலங்குவானூர்தி மலையின் விமானநிலையத்தில் விபத்துக்குள்ளானது. அதில் விமானி, மலை வழிகாட்டி மற்றும் நான்கு வாடிக்கையாளர்களும் இருந்தனர்.

சம்பவ இடத்திற்கு 7 மீட்பு உலங்கு வானூர்த்திகள் சென்றன.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து சுவிஸ் பாதுகாப்பு புலனாய்வு சேவை விசாரணையை தொடங்கியுள்ளது.

No comments