இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்துமாறு சட்டவல்லுநர்கள் பிரித்தானியாவுக்கு அழுத்தம்


பிரித்தானிய உச்சநீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் உட்பட 600க்கும் மேற்பட்ட பிரித்தானிய சட்ட வல்லுநர்கள் இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்துமாறு பிரமர் ரிஷி சுனக்கின் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இஸ்ரேலிய வான் தாக்குதலில் இங்கிலாந்தில் மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து பிரதமர் ரிஷி சுனக்கின் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை தொடர்ந்து அனுப்பினால், சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கு  இங்கிலாந்து உடந்தையாக இருக்கும் என்று நேற்று முன்தினம் புதன்கிழமை பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ஒரு திறந்த மடல் கடிதத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

காசாவில் இனப்படுகொலைக்கான நம்பத்தகுந்த ஆபத்துக்கள் உள்ளது என்ற சர்வதேச நீதிமன்றத்தின் முடிவுக்கு இங்கிலாந்து சட்டப்பூர்வமாகச் செவிசாய்க்கக் கடமைப்பட்டுள்ளது என்று கடித்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான  முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைவர் பிரெண்டா ஹேல் கூறியுள்ளார்.

No comments