கதிரையில்லை:சொகுசு வீடு உண்டு!
2019இல் , எதிர்க்கட்சி தலைவராகப் பதவி வகித்திருந்த ஆர். சம்பந்தன் அப் பதவியிலிருந்து விலகி சுமார் ஆறு வருடங்கள் கடந்த போதிலும், எதிர்கட்சி தலைவருக்கு உரித்தான கொழும்பு 7, மஹகமசேகர மாவத்தையில் ) காணப்படும் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று வரை தொடர்ந்தும் வசித்துவருவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் பிரபல சிங்கள நாளிதழான லங்காதீப, தனது முதற்பக்க தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரமே செயற்படுவதாகவும் இன்று வியாழக்கிழமை வெளியான லங்காதீப நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
2015 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட சம்பந்தனுக்கு இந்த உத்தியோபூர்வ இல்லம் வழங்கப்பட்டது.
Post a Comment