ஸ்லோவாக்கிய அதிபர் தேர்தலில் ரஷ்ய ஆதரவாளர் வெற்றி
ஸ்லோவாக்கிய அதிபர் தேர்தலில் ரஷ்ய ஆதரவு பாராளுமன்ற சபாநாயகர் பீட்டர் பெல்லெக்ரினி வெற்றிபெற்றார்.
நடைபெற்ற அதிபர் தேர்தலில் 99.9 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பெல்லெக்ரினி 53 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மேற்குலக நாடுகளையும் நேட்டோவையும் ஆதரிக்கும் கோர்கோக் 47 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார்.
பெல்லெக்ரினி வெற்றி என்பது தற்போது ஆட்சியில் உள்ள பிரதமர் ரோபர்ட் ஃபிகோவின் ஆளும் கூட்டணிக்கு அரசாங்கத்தின் நிர்வாக மற்றும் சட்டமன்றக் கிளைகள் மீது முழுக் கட்டுப்பாட்டை வழங்கினார்.
இவ்விருவரும் ஹங்கோி போன்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவுக்கு இவர்கள் குடைச்சல் கொடுப்பார்கள் என மேற்குலக நாடுகள் நம்புகின்றன. உக்ரைனுக்கு வழங்கும் உதவிகளை வீட்டோ மூலம் தடுப்பார்கள் என நம்பப்படுகிறது.
ஸ்லோவாக்கியாவை ரஷ்யா-உக்ரைன் போருக்கு இழுப்பது உட்பட, மேற்கு நாடுகள் சொல்லும் அனைத்தையும் தயக்கமின்றி எதிர்க்கக்கூடியவர்.
ஸ்லோவாக்கியாவில் அதிபருக்கு தூதர்களை நியமித்தல், பாராளுமன்றத்திற்கு சட்டத்தை திரும்பப் பெறுதல் அங்கீகரித்தல் மற்றும் பொதுமன்னிப்பு வழங்குதல் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் உள்ளன.

Post a Comment