தெர்லாந்துப் போராட்டத்தில் கிரேட்டா துன்பெர்க் கைது!!


சுவீடன் நாட்டு காலநிலை ஆர்வலர்  கிரேட்டா துன்பெர்க் நெதர்லாந்து ஹேக் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் நெதர்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 வயதான அவர் சனிக்கிழமையன்று புதைபடிவ எரிபொருள் மானியங்களுக்கு எதிரான அணிவகுப்பில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து போராட்டதில் ஈடுபட்டார்.

காவல்துறையினர் எதிர்பாளர்களை தடுக்க முற்பட்டதால் போராட்டம் தடைகளை உடைக்க போராட்டக்காரர்கள் முற்பட்டனர்.

ஹேக்கின் A12 நெடுஞ்சாலையைத் தடுக்க எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர். 

எரிசக்தி நிறுவனமான ஷெல் மற்றும் விமான நிறுவனமான KLM உட்பட புதைபடிவ எரிபொருள் தொழிற்துறையுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நெதர்லாந்து அரசாங்கத்தின் வரிச் சலுகைகளை வழங்குவதைக் கண்டித்து இப் போராட்டம் நடைபெற்றது.

ஜூன் மாதம் புதைபடிவ எரிபொருள் மானியங்கள் பற்றிய திட்டமிடப்பட்ட விவாதத்திற்கு முன்னதாக அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பார்கள் என்று ஆர்வலர்கள் நம்பி இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

No comments