காசாவின் பாரிய மனிதப் புதைகுழி அறிக்கைகளால் அதிர்ச்சியடைகிறேன்


காசாவின் நாசர் மற்றும் அல்-ஷிஃபா மருத்துவமனைகள் அழிக்கப்பட்டமை மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பின்னர் அந்த இடங்கில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான அறிக்கைகளால் நான் அதிர்ச்சி அடைந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் கூறியுள்ளார்.

இந்த மரணங்கள் குறித்து சுயாதீன விசாரணைக்கு வோல்கர் டர்க் அழைப்பு விடுத்தார். இந்த விசாரணைக்குழுவினல் சர்வதேச புலனாய்வாளர்கள் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் மருத்துவமனைகளுக்கு சிறப்புப் பாதுகாப்பிற்கு உரிமை உண்டு. மேலும் பொதுமக்கள், கைதிகள் மற்றும் சண்டையில் ஈடுபடும் மற்றவர்களை வேண்டுமென்றே கொலை செய்வது போர்க்குற்றமாகும்.

நாசரில் 283 உடல்களை தோண்டி எடுத்ததாகவும், சில கைகள் கட்டப்பட்டதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் எப்படி இறந்தார்கள், எப்போது புதைக்கப்பட்டார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நாசர் மருத்துவமனை வளாகத்தில் 283 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 42 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனிய அதிகாரிகளின் அறிக்கைகளை உறுதிப்படுத்தும் பணியில் தற்போது ஈடுபட்டு வருவதாக ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இறந்தவர்களில் வயதானவர்கள், பெண்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் எனக் கூறப்பட்டது, மற்றவர்கள். கைகள் கட்டப்பட்டு, ஆடைகளை களைந்த நிலையில் காணப்பட்டனர்.

இஸ்ரேல் இராணுவம் அங்கு உடல்களை புதைத்ததாகக் கூறுவது ஆதாரமற்றது என்று இஸ்ரேல் கூறுகிறது.

இந்த அறிக்கைகள் நம்பமுடியாத அளவிற்கு கவலை அளிப்பதாக இருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

No comments