ரஃபா தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் படைகள்: புதிதாக எழுந்த கூடாரங்கள்!!


ராஃபா நகரில் இஸ்ரேலின் இராணுவம் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், செயற்கைக்கோள் படங்கள் தெற்கு காசாவில் இராணுவத்தினர் தங்கும் இரண்டு புதிய கூடார முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.

எகிப்தின் எல்லையில் உள்ள ரஃபா, காஸாவில் இன்னும் நுழையாத ஒரே நகரம். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல மாதங்களாக அங்கு தஞ்சமடைந்துள்ளனர்.

எந்தவொரு தாக்குதலுக்கும் முன் அவர்களைப் பாதுகாக்கும் திட்டம் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஹமாஸை தோற்கடிக்கவும் பணயக்கைதிகளை தேடவும் ரஃபாவிற்குள் நுழைவது அவசியம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்துகிறார்.

ஆறு மாத காலப் போரில், இஸ்ரேல் தற்காப்புப் படைகள் (IDF) நுழைந்து காசா நகரம் உட்பட வடக்கு காசா முழுவதையும், முக்கிய தெற்கு நகரமான கான் யூனிஸ் உட்பட மத்திய மற்றும் தெற்கு காசாவின் பெரும்பாலான பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments