ரஷ்யாவின் குண்டுவீச்சு விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரை


ரஷ்யாவின் ஒரு மூலோபாய Tu-22M3 குண்டு வீச்சு விமானமானத்தைச்  சுட்டு இன்று வெள்ளிக்கிழமை வீழ்த்தியதாக உக்ரைன் கூறியது. ஆனால் இந்த விமானம் விபத்துக் காரணமாக வீழ்ந்ததாக மக்கள் செறிவில்லாத பகுதியில் வீழ்ந்ததாக ரஷ்யா கூறுகிறது.

ரஷ்யாவின் தெற்கு பிராந்தியமான ஸ்டாவ்ரோபோலில் விமானம் விபத்துக்குள்ளாகியதாக அதிகாாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மூன்று பணியாளர்கள் மீட்கப்பட்டதாகவும், நான்காவது ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Kh-22 க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரேனிய இலக்குகளை நோக்கி தனது வான்பரப்பிற்குள் இருந்து ஏவுவதற்கு, ரஷ்யா பொதுவாக குண்டுவீச்சைப் பயன்படுத்துகிறது. இது அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லக்கூடியது.

No comments