தலைவரினை போல தலைவர் இல்லை!



தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர், சிறந்தவொரு தமிழ் தலைமையை மக்கள் அடையாளம் காணவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொது வேட்பாளர் குறித்து தமிழரசு கட்சி இதுவரை எதுவித தீர்மானமும் மேற்கொள்வில்லையெனவும்  தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆட்சி முறையிலும் நாட்டினுடைய சரித்திரத்திலும் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டும். அரசியல் உரிமைகள் அனைவரினதும் கைகளுக்கும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மக்களும் தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கின்ற அந்த ஆட்சி முறைமை மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் உண்மையான மக்கள் ஆட்சி. அப்படியான ஒரு மாற்றத்தை நாங்கள் கொண்டுவர வேண்டும்.தேர்தல்கள் வருகின்றபோது பலவிதமான குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுவதுண்டு. பல பல வித்தியாசமான சிந்தனைகள் எல்லாம் உட்புகுத்தப்படுவதுண்டு. ஆனால், ஊழலற்ற உண்மையாக மக்களை ஆட்சி செய்கின்ற மாற்றம் ஏற்படவேண்டும். 

எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கத்தக்க வண்ணமாக ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தல். இதனை இலாவகமாக நாம் கையாள வேண்டும். தமிழ்ப் பொது வேட்பாளர் ஜி.ஜி. பொன்னம்பலம் முதல் எம்.கே. சிவாஜிலிங்கம் வரை என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். 

தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்  எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்திற்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இருப்பதாக நான் காணவில்லை.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்கள் ஆர்வமற்றவர்களாகவே இருக்கின்றனர்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதையடுத்து கட்சி ஒரு சிறந்த தீர்மாத்தை மேற்கொள்ளும்” என சாள்ஸ் நிர்மலநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.


No comments