கச்சதீவு:தேவையற்ற பிரச்சினை!



கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்து வடக்கு தமிழ் மக்கள் இடையே வேதனை அளிக்கின்றது.

இந்தியாவுடன் எங்களின் உறவுகளை தொடர வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும், பூகோள அரசியல் ரீதியாக இந்திய அரசுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புகின்றது எனவும் அன்னராசா தெரிவித்தார்.

இதனிடையே  தேர்தலில் தமிழக கடற்தொழிலாளர்களின் வாக்கு வங்கியை இலக்கு வைத்தே கச்ச தீவை மீட்டு தருகிறோம் என அரசியல்வாதிகள் பிரச்சாரங்களில் சவால் விட்டு வருகின்றனர் என வட மாகாண மீனவர் இணையத்தின் தலைவர் என்.வி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

கச்ச தீவு தொடர்பில் இந்தியாவில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. கச்ச தீவு எங்களுடையது. அது இலங்கைக்கு கச்சதீவு சொந்தமானது தெரிந்ததும் கச்ச தீவை தாம் கொடுத்ததாக கூறி தற்போது தேர்தலை இலக்கு வைத்து பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கச்ச தீவு கடலை அண்டிய பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தமையால், தமிழக கடற்தொழிலாளர்கள் கோபம் கொண்டிருந்தனர். அவ்வேளை அவர்களின் கோவத்தை கட்டுப்படுத்தவே, கச்சதீவில் தமிழக கடற்தொழிலாளர்கள் தமது வலைகளை உலர்த்தவும் , ஓய்வு எடுக்கவும் அனுமதிக்குமாறு  இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுக்களை நடாத்தி அதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டனர் எனவும் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


No comments