முட்டிமுட்டி சாதிக்கும் ஆளுநர் வாகனங்கள்



மாதமொருமுறை வடமாகாணசபை வாகனங்களை விபத்தில் பறி கொடுப்பது வடக்கு ஆளுநரின் கடமையாகும்.தனது பதவிக்காலத்தில் சுமார் எட்டு வரையாக வடமாகாண சொகுசு வாகனங்களை மோதி விபத்திற்குள்ளாக்கியதுடன் காதும் காதும் வைத்தது போன்று மாகாணசபை காசில் அதனை திருத்தியும் விடுவார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம்- மீசாலைப் பகுதியில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் பயணித்த உத்தியோக பூர்வ வாகனம் மீண்டும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வட மாகாண ஆளுநரின் வாகனம் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனம் பாதசாரிகள் கடவையில் வேகத்தை கட்டுப்படுத்திய நிலையில் வேகத்துடன் பயணித்துக் கொண்டிருந்த ஆளுநர் வாகனத் தொடரணி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இவ்விபத்து வடமாகாண ஆளுநரின் ஒன்பதாவது விபத்தென தெரியவருகின்றது.


No comments