பொதுவேட்பாளர்:சிறீதரனும் ஆதரவு
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிக்கும் அதேநேரம் கட்சியின் தீர்மானமும் முக்கியமானதென தமிழரசுக்கட்சி தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தேர்தலில் களமிறங்குவார்களென எதிர்பார்க்கப்படுபவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுடன் எந்த விடயங்களிலும் கரிசனைகளைக் கொண்டவர்களாக தம்மை வெளிப்படுத்தவில்லையெனயும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
இந்நிலையில் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிக்கும் அதேநேரம் கட்சியின் தீர்மானமும் முக்கியமானது.தற்போதைய நிலையில் தேர்தலில் களமிறங்குபவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட எந்தவொரு விடயங்களிலும் கரிசனைகளைக் கொண்டவர்களாக தம்மை வெளிப்படுத்தவில்லை.
ஆகையால் எந்த அடிப்படைகளுமின்றி தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பது பொருத்தமற்றதொரு முயற்சியாகும்.
இந்நிலையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை நிறுத்துகின்றமை பொருத்தமான அணுகுமுறையாகும்.
அந்த முயற்சிக்கு நான் கொள்கை அளவில் இணக்கம் தெரிவிப்பதோடு இலங்கைத் தமிழரசுக்கட்சியினுள் கலந்துரையாடி கட்சியாக தீர்மானம் எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகினதெனவும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment