ரணிலுக்கே எமது ஆதரவு - ஒருபோதும் மொட்டை ஆதரிக்கமாட்டோம் - ஈ.பி.டி.பி


ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கே தமது ஆதரவு என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர்  ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்தல் எதையும் இதுவரை விடவில்லை  ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடாமல் பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தால்,  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவ்வாறு பதில் அளித்தார்   

நிச்சயமாக ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவார் அவரையே ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரிக்கும் பெரமுன  கட்சியை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டில் எமது கட்சி இல்லை தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமைககளை பொறுத்த வரையில் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர் என தெரிவித்தார். 


No comments