காஸா வான்வழித் தாக்குதலில் 7 வெளிநாட்டு உதவிப் பணியாளர்கள் பலி!!

மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் வேல்ட்ட சென்றல் கிச்சின் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் 7
பேர்கொல்லப்பட்டனர்.இத்தாக்குதலையடுத்து ஸ்பெயினைத் தளமாகக் கொண்டு இயங்கும் இத்தொண்டு நிறுவனம் தனது செயற்பாடுகளை இடை நிறுத்தியது.
கொல்லப்பட்டவர்களில் ஆஸ்திரேலியா, போலந்து மற்றும் பிரித்தானியா, பாலஸ்தீனியர் மற்றும் இரட்டை அமெரிக்க/கனடிய குடியுரிமை வைத்திருந்த நபர் என அந்நாட்டுக் குடிமக்கள் என விபரத்தை வேல்ட்ட சென்றல் கிச்சின் வெளியிட்டுள்ளது.
வேல்ட்ட சென்றல் கிச்சின் சின்னத்துடன் தெளிவான குறிக்கபட்ட இரண்டு மகிழுந்தில் பணியாளர்கள் பயணித்த போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இது வேல்ட்ட சென்றல் கிச்சினுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல, உணவுப் போர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் மிக மோசமான சூழ்நிலைகளில் மனிதாபிமான அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல் இது. இது மன்னிக்க முடியாதது என்று WCK தலைமை நிர்வாகி எரின் கோர் கூறினார்.
இத்தாக்குதல் குறித்து மதிப்பாய்வை நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்தது. இத்தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவிக்காமல் அமெரிக்கா அமைதியாக இருக்கிறது.
Post a Comment