இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் 2 ஜெனரல்கள் உட்பட 7 பேர் பலி!!
சிரியாவில் அமைந்து்ளள ஈரானிய தூதரகத்திற்கு அருகில் இருந்த கட்டிடம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானிய உயர்மட்ட தளபதிகள் உட்டப 11 பேர் கொல்லப்பட்டததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொல்லப்பட்டவர்களில் இறந்தவர்களில் எட்டு ஈரானியர்கள், இரண்டு சிரியர்கள் மற்றும் ஒரு லெபனானியர்கள் உள்ளனர்.
இதில் இரண்டு ஈரானிய ஜெனரல்கள் 5 அதிகாரிகள் என 7 பேர் தங்களில் கொல்லப்பட்டதை ஈரான் புரட்சிக் காவல்படை உறுதி செய்துள்ளது.
டமாஸ்கஸில் உள்ள ஈரானிய இராஜதந்திர நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அதன் உறுப்பினர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஜெனரல்களில் மேற்கூறிய அலி ரெசா ஜாதி மற்றும் அவரது துணை முகமது ஹாடி ஹாஜி ரஹிமி ஆகியோர் அடங்குவர்.
2016 வரை லெபனான் மற்றும் சிரியாவில் குத்ஸ் படைக்கு ஜஹ்தி தலைமை தாங்கினார்.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸ் தாக்குதலுக்கு பதில் 'கடுமையாக' இருக்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.
Post a Comment