தூதரக சோதனைக்குப் பின்னர் ஈக்வடோர் உடனான உறவை மெக்சிகோ துண்டித்தது
ஈக்வடோரின் தலைநகர் கியூட்டோவில் உள்ள மெக்சிகோ தூதரகத்திற்குள் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் இருந்த ஈக்வடோர் நாட்டின் முன்னாள் துணை அதிபர் ஜார்ஜ் கிளாஸை ஈக்வடோர் காவல்துறையினர் கைது செய்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை நடந்த சோதனைகளையடுத்து முன்னாள் ஈக்வடோர் கைது செய்யப்பட்டார். இவர் ஏதிலியாக மெக்சிக்கோ தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார்.
இச்சம்பவத்தை அடுத்து ஈக்வடோர் உடனான உறவை மெக்சிக்கோ துண்டித்துள்ளதாக அறிவித்தது. மெக்சிகன் ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், ஈக்வடார் உடனான இராஜதந்திர உறவுகளை துண்டிக்குமாறு நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.
இந்த சோதனை சர்வதேச சட்டம் மற்றும் மெக்சிகோவின் இறையாண்மையின் அப்பட்டமான மீறல் என்று கூறினார்.
கிளாஸ், ஊழலுக்காக இரண்டு முறை தண்டிக்கப்பட்டவர். இவர் மீது கைது உத்தரவு ஈக்வடோரினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Post a Comment