ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்?


ஈரானின் அணு உலை அமைந்துள்ள இஸ்பஹானின் வான்வழியில் வந்த சந்தேகத்திற்குரிய பொருளை வான்பாதுகாப்பு அமைப்பு தாக்கிய அழித்ததாக ஈரானிய இராணுவத்தின் இரண்டாவது உயர் அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் சியாவாஷ் மிஹாண்டவுஸ்ட்வை மேற்கோள்காட்டி ஈரானிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. 

குறித்த தாக்குதலில் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என அந்த அதிகாரி தெரிவித்தாார்.

இந்த தாக்குதல் வெளிநாட்டில் இருந்து வந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் அனுசக்தித் தளம் அமைந்துள்ள இஸ்பஹான் நகரில் உள்ள ஒரு பெரிய விமானத் தளத்திற்கு அருகே வெடிச் சத்தம் செவிமடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈரானின் வான் பாதுகாப்பு எதிர்ப்பு ஆயுதங்கள் தானாகவே வானை நோக்கி வரும் இலக்குகளை சுடத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.

பல சிறிய ஆழில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்பஹானில் மூன்று ட்ரோன்களை இடைமறித்ததாக அழித்ததாக ஈரான் அறிவித்தது.

ஈரானின் அணுசக்தி தளங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குப் பின்னர் ஈரானின் வான்வழி மக்களின் விமானப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை ஈரான் நீக்கியது.

தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து எதுவித தகவல்களும் வெளிவரவில்லை. முதலில் அமெரிக்கா ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக செய்தி  வெளியிட்டது.

மத்திய கிழக்கின் உறுதியற்ற தன்மையால் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன ஆசிய பங்குகள் வெள்ளிக்கிழமை சரிந்தன, ஜப்பானின் நிக்கேய் 3.5% சரிந்தது.

தாக்குதல்கள் நடத்தப்பட்ட சில நிமிடங்களில் மசகு எண்ணெய்யின் விலை 3 டொலர்களால் அதிகரித்துள்ளது.

ஈரானின் வான் காப்பு ஆயுதங்கள் வான்நோக்கி எதிர்த்தாக்குதல்களை நடத்தும் காணொளியும் வெளியாகியது.

No comments