பலாலியும் மலிவு விலையில்!

 


வடகிழக்கிலுள்ள தமிழ் மக்களது சொத்துக்கள் வேகமாக விற்பனை செய்யபட்டுவரும் நிலையில் யாழ். சர்வதேச விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவலை துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தனியார் துறையினருக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்ததன் பின்னர் மேலதிக பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மத்தளம் விமான நிலையத்தின் செயற்பாடுகளை இந்திய மற்றும் ரஸ்ய நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை, நிதி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணம் சர்வதேச விமானத்தினை இந்திய அதானி குழுமமே கொள்வனவு செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.

முன்னதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விற்பனை செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் எதிர்ப்புக்களால் அம்முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளது.


No comments