யாழில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் - அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தின் அனுமதி இரத்து


யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தின் அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. 

கடந்த மாதம் அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஒருவர் மூட்டு வலியால் அவதிப்பட்ட நிலையில் குறித்த சிகிச்சை நிலையத்திற்கு சிகிச்சைக்கு சென்று இருந்தார். 

அவருக்கு உரிய முறையில் ஊசிகள் செலுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படாததால் , அவருக்கு மேலும் வலி ஏற்பட்ட நிலையில் , யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார் 

அவரது உயிரிழப்புக்கு காலில் செலுத்தப்பட்ட ஊசிகள் உரிய முறையில் செலுத்தப்படாததால் காலில் கிருமி தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக உட்கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டது. 

அதனை அடுத்து , சுகாதார திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்திற்கான அனுமதியினை இரத்து செய்துள்ளது. 

தொடர்ந்து குறித்த அக்குபஞ்சர் சிகிச்சை நிலையம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. 

No comments