ரஷ்ய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் வாக்குப் பதிவுகள் ஆரம்பம்!!


ரஷ்ய நாட்டுக்கான அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குகளை அளித்து வருகின்றனர்.

தேர்தலில் ரஷ்ய அதிபராக மேலும் 6 ஆண்டுகள் விளாடிமிர் புடின் இருப்பார் என்பது ஏற்கவே உறுதியாகியுள்ள நிலையில் தேர்தல் வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. இத்தேர்தலில் 3 நாள்கள் வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள வாக்குச் சாவடிகள் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 08:00 மணிக்கு (வியாழன் 20:00 GMT) திறக்கப்பட்டு, இறுதியாக ஞாயிற்றுக்கிழமை 20:00 மணிக்கு மேற்குக் கலினின்கிராட் எக்ஸ்கிளேவில் மூடப்படும்.

71 வயதான விளாடிமிர் புடின் கடந்த டிசம்பரில் நடந்த மாபெரும் இராணுவ விருது வழங்கும் விழாவில் தான் ஐந்தாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஷ்ய மக்களிடம் தெரிவித்தார்.

புடின் எந்தவொரு சாத்தியமான போட்டியாளர்களுக்கும் மேலாக தலை நிமிர்ந்து நிற்கும் ஒரு தேசிய தலைவராக பதவி உயர்வு பெற்றார்.

சோவியத் கால ஆட்சியாளர் ஜோசப் ஸ்டாலினுக்குப் பின்னர் நீண்ட காலம் ஆட்சில் இருப்பவர் விளாடிமிர் புடின் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய அரசியலமைப்பால் விதிக்கப்பட்ட இரண்டு கால வரம்பு காரணமாக நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்ததைத் தவிர, 2000 முதல் அவர் ஜனாதிபதியாக இருந்து வருகிறார்.

புடினின் தனது ஆட்சிக் காலத்தில் இரண்டு தடவைகள் அதிபராக இருக்கும் அரசியலமைப்பு விதிகளை மீண்டு அதிபர் ஆவதற்காக அரசியலமைப்பு விதிகளை மாற்றிக்கொண்டார். அதாவது, 2030ல் அவருக்கு 78 வயதாகும் போது, ​​அவர் மேலும் ஆறு ஆண்டு பதவிக்காலம் தொடரலாம்.

No comments