உக்ரைனுக்கு படைகளை அனுப்புவது தற்போதை சூழ்நிலையில் தேவையில்லை - மக்ரோன்


உக்ரைனுக்கு மேற்கு நாடுகளின் படைகளை அனுப்புவதை நிராகரிக்கக்கூடாது என்று நிலைப்பாட்டை வலியுறுத்திய பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தற்போதைய சூழ்நிலையில் அந்த நிலைப்பாடு தேவையில்லை என்பதை ஒப்புக்கொண்டார். 

நேற்று வியாழக்கிழமை பிரஞ்சு தேசிய தொலைக்காட்சியான TF1 மற்றும் France 2 இல் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டார்.

உக்ரைனுக்கு மேற்கு நாடுகளின் படைகளை அனுப்புவதை நிராகரிக்கக்கூடாது என்ற மக்ரோனின் கருத்துக்கு ஏனைய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியது. அத்துடன் இத்தலைவர்கள் உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் நாங்கள் உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் சூழ்நிலை இல்லை. ஆனால் இந்த விருப்பங்கள் அனைத்தும் சாத்தியம் என்று மக்ரோன் கூறினார்.

நாட்டின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான மக்ரோன், பிரான்ஸ் எந்தச் சூழ்நிலையில் படைகளை அனுப்பத் தயாராக இருக்கும் என்பதை விவரிக்க மறுத்துவிட்டார். 

படைகளை அனுப்பும் நடவடிக்கையைத் தூண்டும் பொறுப்பு மாஸ்கோவிடம் இருக்கும் என்று அது நாங்களாக இருக்காது என்று  கூறினார்.

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்குள் ஒரு தாக்குதலை பிரான்ஸ் வழிநடத்தாது என்றும் கூறினார்.

உக்ரைனில் அமைதி நிலவுவதற்கு நாம் பலவீனமாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.

ரஷ்யா-உக்ரைன் போர் என்பது பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவிற்கு இருத்தலுக்குரியது என்று மக்ரோன் விவரித்தார்.

ஐரோப்பாவில் போர் பரவினால், அது ரஷ்யாவின் ஒரே தேர்வாகவும் முழுப் பொறுப்பாகவும் இருக்கும். உக்ரைன் தோற்கடிக்கப்படுவதை விரும்பவில்லை என்பதைக் குறிப்பிட்டார்.

No comments