வெடுக்குநாறி:கைதானவர்களிற்கு சிறை!
வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் நேற்றிரவு சிவராத்திரி தினத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிர்வரும் செவ்வாய் வரை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தின இரவு நிகழ்வுகளுக்காக கூடியிருந்த பக்தர்கள் மீது பொலிஸார் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டிருந்தனர். பெண்களை கழுத்தைப் பிடித்து இழுத்து வீசியும் சுவாமிக்கான படையல் பொருட்களை சப்பாத்துக்கால்களால் உதைந்தெறிந்தும் அட்டகாசம் புரிந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு காவல்துறையினால் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே எதிர்வரும் செவ்வாய் வரை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment