மாற்று துணிகள கூட இல்லை!




வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட எட்டு பேரும் மாற்று ஆடைகளை பெறக்கூட இலங்கை காவல்துறை அனுமதி மறுத்துவருகின்றது.

இதனிடையே  சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு இன்று அழைத்து வரப்பட்டனர்.

கைதான எட்டு பேரும் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான எட்டுபேரும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்தனர். சட்ட வைத்திய பரிசோதனைக்கு முன்னிறுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து குறித்த எட்டு பேரும் சிறைச்சாலைகள் திணைக்களத்தால் இன்றையதினம் வவுனியா சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதேவேளை, இன்று விடுமுறை தினம் என்பதால் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் இல்லை. எனவே வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கான மாற்று ஆடைகள் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் சிறைக்காவலர்கள் அதற்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை. இதனால் குறித்த எட்டு பேரும் இருதினங்களாக கைதுசெய்யப்படும் போது அணிந்திருந்த ஆடைகளே அணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments