வெடுக்குநாறி மலையில் சரத்!



வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சரான சரத் வீரசேகர இருந்ததாக குற்றச்சாட்டுக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் முன்வைத்துள்ளார்.

ஏற்கனவே குருந்தூர்மலை விகாரை நிர்மாண பணிகளிலும் முன்னாள் அமைச்சரான சரத் வீரசேகர இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தது.

இந்நிலையில் வெடுக்குநாறிமலை விவகாரத்தில் வடகிழக்கு தழுவிய மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க சிவில் அமைப்புக்கள் முன்வந்துள்ளன.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

கைதானவர்கள் சார்பில் முன்னணி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், சிறீகாந்தா, மற்றும் க.சுகாஸ், 11 சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

எனினும் தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிபதி எதிர்வரும் 19 ஆம் திகதி வரை சிறையில் தொடர்ந்து தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.



No comments