வடக்கிற்கு கசக்கிறது?



வடக்கு இந்தியாவுடன் முரண்பட தெற்கு உறவை மேம்படுத்து முனைப்பு காண்பித்துவருகின்றது.

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்ட நிலையிலேயே, பாட்டலி சம்பிக்க ரணவக்க  பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இதனிடையே இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை உடன் தடுத்து நிறுத்துமாறு கோரி இன்றும் வடக்கில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ருந்தது.அத்துடன்,யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்திடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே இந்திய மீனவர்களது அத்துமீறல்கள் தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு காணப்படாவிடின் மாபெரும் போராட்டங்கள் இடம்பெறும் என பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மயிலிட்டி மற்றும் வடமராட்சி மீனவர்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் யாழ்ப்பாண கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய இழுவை படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி வேலணைப் பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசமும்  இன்று செவ்வாய்க்கிழமை (12)  கண்டன போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.


No comments