பிரதம செயலாளர் :எல்.இளங்கோவன்!



தனது நெடுநாள் போராட்டத்தின் பின்னராக வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் பதவியை எல்.இளங்கோவன் பெற்றுள்ளார்.1991 ஆம் ஆண்டில் அரச நிர்வாக சேவையில்  உதவி அரசாங்க அதிபராக கடமையேற்று பல்வேறுபட்ட நிர்வாக சேவைகளை கையாண்டு மாகாண பிரதம செயலாளராக இளங்கோவன் பதவியேற்றுள்ளார்.

வடமாகாணசபையின் கல்வி அமைச்சு செயலாளராக பதவி வகித்த இளங்கோவன் பின்னரான வடக்கு ஆளுநரது செயலாளராக பதவி வகித்த வேளை முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராசாவினால் விரட்டப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் வடக்கிற்கான அபிவிருத்தி இணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது இளங்கோவன் பிரதம செயலாளர் பதவியை பெற தற்போதை பிரதம செயலாளராக கடமையாற்றிய சிங்களவரான சமன் பந்துலசேன ஜனாதிபதியின் வடக்கிற்கான அபிவிருத்தி இணைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார்.

இருவரும் 15ம் திகதி வெள்ளிக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.


No comments