சுமாவே விடுவித்தாராம்!

 


மஹா சிவராத்திரி அன்று   வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய அனுஸ்டானத்தில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தால் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்திலிருந்தும் நீதிமன்றம் விடுவித்துள்ளதுடன் இலங்கை காவல்துறை தாக்கல் செய்திருந்த வழக்குகள் பொய்யானவையென்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

வெடுக்குநாறி மலையில் தொல்லியல் சின்னங்களை சேதமாக்கியதாக காவல்துறை குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த போதும் சான்றாதாரங்களை சமர்ப்பித்திருக்கவில்லை.

இதனிடையே மஹா சிவராத்திரி அன்று   8 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் போராட்டம் நடத்தியதையடுத்து பதற்றமான சூழல் ஏற்பட்டுமிருந்தது.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் தவறான குற்றச்சாட்டின் பேரில் எட்டு பேரும் கைது செய்யப்பட்டதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  குற்றஞ்சாட்டினர்.

கைதானவர்களை விடுவிக்க கோரி வடகிழக்கெங்கும் போராட்டங்களை தொடர்ந்த நிலையில் இன்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

எனினும் வழமை போல ரணில் விக்கிரமசிங்க எம்.ஏ.சுமந்திரன் பேச்சுக்களையடுத்தே விடுதலை நடந்தததாக பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


No comments