ரோசமுள்ள தலைவர்கள்?

 


தமிழர்களின் சைவ சமயமும் ஆதி சிவன் கோவிலும் அவமதிக்கப்பட்டதை கண்டித்து வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி பொலிசார் அட்டுழியங்களுக்கு நீதி கோரி இன்றைய நல்லூர் வெடுக்குநாறிமலை ஆதி சிவன்  விவகார கவனயீர்ப்பில் அனைத்து ஆதீன முதல்வர்களும் சிவபூமி தலைவர் ஆறு திருமுருகன் ஐயாவும் அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சி தலைவர்களின் முன்னிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரச்சனைக்கு நீதி கிடைக்கும் வரை நாடாளுமன்றை புறக்கணிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தனர்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எண்மரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் சிவராத்திரி வழிபாட்டினை தடுத்தமையினை கண்டித்தும் நல்லூரில் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆதீனங்கள் மற்றும் கிறீஸ்தவ மத தலைவர்கள்,அரசியல் பிரதிநிதிகள் என நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நல்லை ஆதீனத்தின் முன்னதாக இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

No comments