யாழில் வாள் வெட்டு - இளைஞன் உயிரிழப்பு


 யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலில் பலியானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதுடைய தவச்செல்வம் பவிதரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இன்று வட்டுக்கோட்டையிலிருந்து காரைநகர் சென்று திரும்பும் போதே இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நபர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

முன்னதாக மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்கில் மேற்படி வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments