முன்னர் கோத்தாவுக்கு:இப்பொழுது ரணிலுக்கு!!



நடந்து முடிந்த தேர்தலில் கோத்தபாயவிற்கு புள்ளடி கோரிய தரப்புக்கள் மீண்டும் கோத்தபாயவின் பினாமியான ரணிலை மேடையேற்ற மீண்டும் புதிய கோசங்களுடன் களமிறங்கியுள்ளன.

சாந்தனிற்கு அஞ்சலி செலுத்தினால் இந்தியா கோபிக்குமென தலைமறைவானவர்கள் கொழும்பில் பதுங்கியவர்களென கே.ரி.கணேசலிங்கம் உள்ளிட்ட மேள கோஸ்டியின் பங்கெடுப்புடன் புதிய பிரச்சாரங்கள் ஆரம்பித்துள்ளது.

நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் எப்படியான முடிவுகளை எடுக்க வேண்டும்  என்பது தொடர்பான மக்களின் கருத்துக்களை  அறிவதற்கான முதலாவது கூட்ட தொடரென தந்தை செல்வா கலையரங்கில் கோத்தபாய பினாமி கும்பலால் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வெடுக்குநாறி மலை போராட்டத்திற்கு செல்லாத இந்த கும்பல் கதிரைக்கு திரிவது அம்பலமாகியிருக்கின்றது. 

அடுத்து வரும் தேர்தலில் கதிரை பிடிக்க திரியும் கும்பல் பங்கெடுத்த இந்நிகழ்வின் பின்னணியில் இந்திய தூதரகம் இருந்ததாக சொல்லப்படுகின்றது.



No comments