ஈபிடிபி மற்றும் சிவி ரணிலுக்கு ஆதரவாம்!


 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஈபிடிபி கட்சி மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு தேசிய நெருக்கடிக்கு தீர்வு காணக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க என வடக்கு, கிழக்கு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் வெள்ளைக் கொடிகளைக் கையில் ஏந்தி சரணடைந்த தமிழ் மக்களை என்ன செய்ய வேண்டும் என்று முல்லைத்தீவு படையணியினர் வினவினர்.அப்போது பாதுகாப்பு செயலாளராக  இருந்த கோதாபய சற்றும் சிந்தியாது “அவர்கள் யாவரையும் சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்று கட்டளை இட்டார்” என  இராணுவ அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன்.

இராணுவத்தினர் கைவசம் அன்று இருந்த பல இடங்களில் இன்று இறந்தவர்களின் மனித எலும்புகளும் எலும்புக்கூடுகளும் நிலத்திலிருந்து வெளிவருகின்றன. உண்மையான சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்றால் சரணாகதி அடைந்தவர்கள் எவ்வாறு, யாரின் கட்டளைக்கமைய காணாமல் போனார்கள் என்ற விடயம் வெளிவந்துவிடும் எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


No comments